வவுனியாவில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் படுகாயம்!!

608

நெளுக்குளம் பகுதியில்..

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (21.03.2020) தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தில் தேங்காய்களை பறிப்பதற்காக ஏறிய ஒருவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

அருகில் இருந்த அயலவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு பலமுறை அழைத்தும் பலனளிக்கவில்லை, என்பதால் அங்கிருந்த பட்டா ரக வாகனத்தில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.