வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் ஊரடங்கு தொடர்கிறது!!

750

ஊரடங்கு..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து மூன்றாவது நாளாகவும் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாடு பூராகவும் ஊடரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வரவுள்ள போதும் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் கொரனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து வவுனியாவில் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் இருந்து பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

வவுனியாவின் வீதிகள் அனைத்தும் சன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதுடன், பொலிசார் பாதுகாப்புக் கடமையில் உள்ளனர்.