இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு!!

634

பிந்திய இணைப்பு : இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது மேலும் 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மொத்த எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15 வைத்தியசாலைகளில் 250க்கும் அதிகமானோர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு : இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15 வைத்தியசாலைகளில் 222 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.