வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!!

976

பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு..

வவுனியாவில் மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 18 குடும்பத்தினருக்கு பல நண்பர்கள் இணைந்து இன்று (23.03.2020) மதியம் 12.30 மணயளவில் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளிக்கிணங்க பல நண்பர்கள் இணைந்து ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 18 குடும்பத்தினருக்கு 36,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியா விஸ்காடு, பாரதிபுரம், சாம்பல் தோட்டம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட (அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும்) 18 குடும்பத்திரை தெரிவு செய்து கனவுகள் அமைப்பு தர்சிகன் , வவுனியா பொறியியலாளர் தயா ஆகியவர்களின் நிதிப் பங்களிப்புடனும் நெளுக்குளம் நதீபன், மஞ்சு சாரதி பயிற்சி நிலைய உரிமையாளர் மஞ்சு, பீட்டா தனியார் நிறுவனத்தின்உரிமையாளர் விஜிதரன் , வீரபுரம் ஊடகவியலாளர் சஜீவன், வங்கி ஊழியர் மயூரன், நிதி நிறுவன உத்தியோகத்தர் சுஜேஸ் ஆகியோரின் நிதிப்பங்களிப்பிலும் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக மூன்று தினங்களும் ஒர் நாளைக்கு ஒர் வேலை மாத்திரம் உணவு மாத்திரம் சாப்பிடும் இரண்டுக்கு மேற்பட்ட குடும்பத்தினரும் இவ் உதவித்திட்டத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.