உணவின்றி தவித்து வந்த கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!!

636

கட்டாக்காலி நாய்களுக்கு..

ஹட்டன் நகரில் பட்டினியுடன் நடமாடும் தெரு நாய்களுக்கு உணவு மற்றும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஹட்டன் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நேற்று மேற்கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் ஹட்டன் நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வர்த்தக நிலையங்களில் அப்புறப்படுத்தப்படும் உணவுகளை உண்டு வாழ்ந்த கட்டாகாலி நாய்கள் பல மணி நேரம் உணவின்றி தவித்து வந்துள்ளன. இந்த நாய்களுக்கு உணவு மற்றும் குடிநீரை பெற்றுக்கொடுக்க பிரதேசத்தில் உள்ள சிலர் முன்வந்திருந்தனர்.