இத்தாலியில் 8 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று : 50 பேர் தீவிர கண்காணிப்பில்!!

700

இத்தாலியில் வாழும் 8 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 50 இலங்கையர்கள், இத்தாலி சுகாதார அதிகாரிகளினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸினால் இறக்கும் வீதம் கீழ் மட்டத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 800 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் 602 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளன.

விரைவில் உயிரிழப்பு வீதம் பூஜ்ஜியத்தை எட்ட வேண்டும் என்பது உலக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தாலியில் இதுவரை ஆறாயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.