கொரோனா வைரஸ் பரவல் அளவிடமுடியாத அளவுக்கு சென்றுள்ளது!!

543

கொரோனாவைரஸ் பரவல் ஏற்கனவே அளவிடமுடியாத அளவுக்கு சென்றுள்ளது. எனவே வரையறுக்கப்பட்ட பொருளாதார பாதிப்புடன் மக்கள் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப்பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜி20 நிதியமைச்சர்கள் மாநாடு நேற்று வோஷிங்டனில் நடைபெற்றபோது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே பல நாடுகளும் சுகாதார சேவைகளின் மூலம் மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

எனினும் 80 நாடுகள் தமது அமைப்பின் உதவியை கோரியுள்ளதாக கிறிஸ்டினா குறிப்பிட்டார். இந்தநிலையில் தமது அமைப்பினால் 1 ரில்லியன் அமரிக்க டொலரை இந்த திட்டத்துக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.