வவுனியாவில் 2ம் கட்டமாக பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!!

424

உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்

வவுனியாவில் ஐந்து நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 13 குடும்பத்தினருக்கு கனவுகள் அமைப்பினரினால் இன்று (23.03.2020) மதியம் 12.30 மணியளவில் உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளிக்கிணங்க கனவுகள் அமைப்பினரினால் ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1 பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 13 குடும்பத்தினருக்கு 26,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தங்கநகர், தவசிகுளம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட (அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும்) 13 குடும்பத்திரை தெரிவு செய்து கனவுகள் அமைப்பினரின் நிதி உதவியில் ஊடகவியலாளர் சஜீவன், கனவுகள் அமைப்பின் சார்பாக தர்சிகன், கனீஸ்ரன், சமூக ஆர்வலர் நந்தினி ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.