கணவரை 318 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!!

529

Knifபிரான்சில் பெண் ஒருவர் தனது கணவரை 318 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பிரான்சின் பாரிசில் Nangis என்ற பகுதியில் தம்பதியர் ஒருவர் வசித்து வந்துள்ளனர், இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.
கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும், இந்நிலையில் கடந்த 25ம் திகதி இரவு தகராறு ஏற்பட்டது.

இருவருக்கும் இடையேயான தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த மனைவி கத்தியை எடுத்து கணவரை குத்திக் கொலை செய்துள்ளார்.
இதன்பின் பொலிசுக்கு போன் செய்து, கணவரை கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பொலிசார் வருவதற்குள் குறித்த நபர் பரிதாபமாக பலியானார், முதலில் 80 முறை மட்டுமே கத்தியால் குத்தியுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது மிகவும் கொடூரமாக 318 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது, இதனையடுத்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.