கணவனுக்கு தானமளித்த சிறுநீரகத்தை மீளக் கேட்கும் மனைவி!!

598

Fightவேறு பெண்ணை காதலிப்பதால் கணவனுக்கு அளித்த சிறுநீரகத்தை திரும்ப கேட்டு மனைவி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் அண்டி லேம்ப். சிறுநீரகம் பழுதடைந்ததால், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டால்தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் அவரது மனைவி சமந்தா தன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளித்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமடைந்தனர். இந்நிலையில் லேம்ப், தனது தோழியை காதலிப்பதாக சமந்தா சந்தேகமடைந்தார்.

சந்தேகம் உறுதியான நிலையில் தானமாக அளித்த சிறுநீரகத்தை திரும்ப அளிக்கும்படி கேட்டுள்ளார். சமந்தாவின் குற்றச்சாட்டை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய லேம்ப் மனைவியின் தோழியை காதலிக்கவில்லை என்றும் தன் சிறுநீரகத்தை அகற்ற மறுத்ததாகவும் மனைவியின் வற்புறுத்தலால் அவரது சிறுநீரகத்தைப் பெற்றதாகவும் கூறியுள்ளார்.