விதிமுறைகளை மீறியதால் ஒஸ்கார் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பாடல்!!

279

Oscarஇந்த வருடம் ஒஸ்கார் விருதுகளில் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடும் பாடல்களில் ஒரு பாடல் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

அலோன், யெட் நாட் அலோன் என்ற பெரிதும் அறியப்படாத கிறிஸ்துவத் திரைப்படத்தின் ‘அலோன், யெட் நாட் அலோன்’ என்ற பாடல் போட்டிப்பட்டியலில் சேர்க்கப்பட்டதே பலருக்கு ஆச்சர்யத்தைத் தந்திருந்தது.

அந்த பாடலின் எழுத்தாளர் புரூஸ் பரௌட்டன் என்பவர் ஒஸ்கார் விதிமுறைகளை மீறியதாக பின்னர் தெரியவந்துள்ளது.

ஒஸ்கார் விருதுக்காக வாக்குகள் அளிக்கும் காலத்தில் அவர் தனது சமர்ப்பிப்பு பற்றி ஒஸ்கார் அமைப்பின் இசைக் கிளையின் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஒஸ்கர் விதிமுறையை மீறியுள்ளார்.

அகாடமியின் இந்த முடிவு தனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக கழகத்தின் இசைக் கிளையின் நிர்வாகக் குழுவில் பணி புரியும் புரூஸ் தெரிவித்துள்ளார்.