சிரிய ராணுவ குண்டுத் தாக்குதலில் 121 பேர் பரிதாபமாக பலி!!

531

SYRIA-CONFLICT-DAMASCUS-BOMBசிரியாவின் வடக்கு அலெப்போ மாநிலத்தில் சிரிய ராணுவம் ஹெலிகாப்ட மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 121 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சுயாதீன குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 13 குழந்தைகளும் 10 போராளிகளும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை ராணுவதளம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.