தலைமுடியில் ஸ்வெட்டர், தொப்பி தயாரித்து சாதனை!!

1176

Switterசீனாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தன் தலைமுடியில் ஸ்வெட்டர் மற்றும் தொப்பியை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த ஷியாங் ரென்சியன், தன்னுடைய 34வது வயது முதல் தலைவாரும்போது சீப்பில் இருக்கும் முடிகளை தனித்தனி இழைகளாகப் பிரித்து சேமித்து வைத்தார்.

ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தன்னிடமிருந்த முடிகளை சேர்த்து 1.10 லட்சம் இழைகளை உருவாக்கினார்.

இந்த இழைகளைக் கொண்டு, ஒரு ஸ்வெட்டரையும், தன் கணவருக்காக ஒரு தொப்பியையும் தயாரிக்கும் பணியை 2003ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் செலவிட்டு தயாரித்துள்ளார்.

இவர் தயாரித்துள்ள ஸ்வெட்டர் 382 கிராம் எடையும், தொப்பி, 119 கிராம் எடையும் உள்ளது.