கனடாவில் தனது ஆன்மாவை விற்பனை செய்ய முயலும் இளம்பெண் : என்ன விலை தெரியுமா?

851

கனடாவில்..

கனடாவை சேர்ந்த பிரபல பாடகி கிளாரி எலிஸ் பவுச்சர், ஓன்லைன் நுண்கலை கண்காட்சியான “செல்லிங் அவுட்” (Selling out) இல் தனது ஆன்மாவை போன்ற தன் கலையை விற்பனை செய்யவுள்ளார்.

தொழில் ரீதியாக கிரிம்ஸ் என அழைக்கப்படும் கிளாரி கூறுகையில், இதை வாங்குபவர் எனது ஆத்மாவின் ஒரு சதவீதத்தைப் பெறுவார். யாரும் அதை வாங்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனவே நாங்கள் அதை 10 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு வைத்தேன், அதனால் அது விற்பனை ஆக வில்லை.

நாம் இன்னும் ஆழமாகப் பார்த்தால், மேலும் தத்துவ ரீதியாக இது சுவாரஸ்யமானது, கலை தொடர்பாக எனது வழக்கறிஞருடன் இணைய விரும்பினேன். சட்ட ஆவணங்களின் வடிவத்தில் அருமையான கலையின் யோசனை எனக்கு மிகவும் புதிராகத் தெரிகிறது.

ஒரு கீபோர்டை தொடுவதற்கு 10, 12 ஆண்டுகளுக்கு முன்பே நான் இதை உருவாக்கினேன். என்னை மக்கள் முதலில் ஒரு காட்சி கலைஞனாகவே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் என்னை இசை வழியாக அறிந்திருப்பது எனக்கு எப்போதுமே விசித்திரமாக இருக்கிறது என கூறியுள்ளார்.