மூடப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் : அதனால் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்!!

517

மூடப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள்..

கனடாவின் ஒட்டாவா பகுதியில் எந்த இடத்திலும் பொது கழிப்பிடங்கள் தற்சமயம் திறக்கப்படாததால் சிரமத்துக்கு ஆளான பெண் அது குறித்து பேசியுள்ளார்.

ஒட்டாவா நகரில் கொரோனா அச்சத்தால் பொது கழிப்பிடங்கள் அனைத்து மூடப்பட்டுள்ளது, இது பலருக்கும் பிரச்சினையையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட் மளிகை கடைக்கு வந்த Caroline Bergeron என்ற இளம்பெண் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்த அனுமதி கேட்ட நிலை அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் அனுமதி கேட்டும் யாருமே அவருக்கு அனுமதி தரவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் அதே மளிகை கடையில் ஜாடியை வாங்கி, காருக்குள் சென்று அதற்குள் சிறுநீர் கழித்துள்ளார். இந்த தர்மசங்கடமான நிலை குறித்து Caroline கூறுகையில், எனக்கு இந்த சூழலில் மிகவும் சங்கடமாக இருந்தது, இது போன்ற விடயத்தை நான் முதல்முறையாக கேள்விப்படவில்லை.

பலருக்கும் இந்த அசெளகரியமான நிலை தற்போதைய சூழலில் ஏற்படுகிறது, பொது கழிப்பறையை மூடி வைத்திருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

இது குறித்து தொற்றுநோயியல் நிபுணர் Raywat Deonandan கூறுகையில், கழிவறைகள் பற்றாக்குறை கடுமையான சுகாதார பிரச்சனையை ஏற்படுத்துமோ என கவலை தருகிறது.

நகரில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொது கழிப்பறைகளையும் திறக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள் என கூறியுள்ளார்.