கணவரை விவாகரத்து செய்ததால் கோடீஸ்வரியான பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

489


கோடீஸ்வரியான பெண்..


சீனாவில் கணவரை விவாகரத்து செய்ததன் மூலம் பெண் ஒருவர் கோடீஸ்வரரான சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான்.சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் யுவான், தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.


தற்போது இருவரும் விவாகரத்து செய்த நிலையில், தனது தடுப்பூசி நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை யுவானுக்கு கொடுத்துள்ளார் டு வீமின். இதன்மூலம் யுவான் உலக பணக்காரர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.


அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்தை தொடர்ந்து உலகின் விலையுயர்ந்து விவாகரத்தாக இது பார்க்கப்படுகிறது.