வவுனியாவில் வயல் காணியில் வர்த்தக கட்டிடம் : அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

2420


வயல் காணியில் வர்த்தக கட்டிடம்..



வவுனியா பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல் காணியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வர்த்தக நிலைய கட்டிட நிர்மான பணியினை உடனடியாக நிறுத்துமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் அவர்களினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கமநல அபிவிருத்தி ஆணையாளரின் எழுத்திலான அனுமதியின்றி நெற்காணி பதிவேட்டுல் பதியப்பட்டுள்ள நெற்காணியில் கட்டுமானத்தினை நிர்மாணிப்பது 2011ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32ம் பிரிவின் உப பிரிவு (1) இன் பிரகாரம் கு ற்றச் செயலாகும்.




இதன் பிரகாரம் பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல்காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்வரும் 18.06.2020ம் திகதிக்கு முன்பதாக கட்டிடத்தினை அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிட்ட அறிவித்தலுக்கு இனங்கத் தவறினால் சட்டத்தின் பிரகாரம் பொலிஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன் நிர்மானப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றபடும் எனவும்,

தவறொன்றினை இழைத்த குற்றவாளியாக வேண்டி ஏற்படும் சமயத்தில் ஒரு லட்சம் ரூபாவிற்கு விஞ்சாத குற்றப்பணமும் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டணைக்கு ஆளாகுதல் வேண்டும் என கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் பிறப்பித்துள்ள உத்தரவு அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.