வவுனியா ஒமந்தையில் மக்களுக்கு பொலிஸாரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

880


பொலிஸாரினால் உலர் உணவுப் பொதிகள்..



வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு ஒமந்தை பொலிஸாரினால் உலர் உணவு பொதிகள் இன்று (07.06.2020) காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.



ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் ஆலோசனைக்கமைய விசேட பொசன் தினத்தினை முன்னிட்டு கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிப்பட்ட 25 குடும்பத்தினருக்கு உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு ஒமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.




ஒமந்தை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்டம் – 2 உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் , வன்னி இராணுவ கட்டத்தளபதி சம்பத் டிஸ்சனாயக்க,


ஒமந்தை பாடசாலை அதிபர் பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் , வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், ஒமந்தை வர்த்தகர்கள், பயனாளிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக இடைவெளியினை பேணி இவ் உதவித்திட்டம் வழங்கு நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.