வவுனியா நகர் முழுவதும் முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிப்பு!!

2554

இராணுவத்தினர்..

கடந்த மூன்று மாதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச்சட்டம் தற்போது தளர்த்தப்பட்டு நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளதுடன்,

அரச, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று (08.06.2020) முதல் வழமைக்கு திரும்பியுள்ளமையினையடுத்து வவுனியா நகரின் முக்கிய இடங்களில் இராணுவத்தினர் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தாண்டிக்குளம் சந்தி, வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகே, புதிய பேரூந்து நிலையம், ஏ9 வீதி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் திடீர் சோ தனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஓமந்தை இராணுவச் சாவடியில் தூரப்பகுதிகளிலிருந்து வடபகுதிக்கு வருபவர்களின் பதிவு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.