இலங்கையில் கையடக்க தொலைபேசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு!!

665

கையடக்க தொலைபேசி..

நாட்டில் பல இடங்களிலும் என்றும் இல்லாத வகையில் கையடக்க தொலைபேசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றையடுத்து இலங்கையில் இறக்குமதி தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொலைபேசி உட்பட அதன் உதிரிப்பாகங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் புதிய கையடக்க தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில வணிகர்கள், கைப்பேசிகளை உரிய விலையை விட அதிகரித்த விலையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது சந்தையில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.