அதிதீவிர பாதுகாப்பில் அனைத்து பாடசாலைகளும் : கல்வியமைச்சரின் உறுதிமொழி!!

997

கல்வியமைச்சரின் உறுதிமொழி..

எதிர்வரும் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாடசாலைகள் திறக்கும் போது சுகாதார பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமையவும், பணிக்குழுவின் அறிவுரைக்கு அமையவும் செயற்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெரும தெரிவித்துள்ளார்.

இதற்கு உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் கையேடுகளாக பாடசாலைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றினை அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குள் நுழையும் சந்தர்ப்பம் முதல் மீண்டும் பாடசாலைகள் நிறைவடைந்து வீட்டிற்கு செல்லும் வரையிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும பின்பற்றி செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி வரை எந்தவொரு கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் அதுவரை மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

இந்தக் காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என நேற்று கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.