வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை கொவிட்-19 நிதியத்திற்கு வழங்குமாறு கோரிக்கை!!

834

வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை கொவிட்- 19 நிதியத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இம் மாதம் ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது அடிப்படை சம்பளத்தில் ஒரு நாள் சம்பளத்தை கொவிட் – 19 நிதியத்திற்கு வழங்க சம்மதம் தெரிவித்து கையொப்பமிடுமாறு அவர்களது சம்பள பட்டியலுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

கொவிட் 19 நிதியத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. அதனை நாம் பாடசாலை அதிபர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.

அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். தற்போது ஆசிரியர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவித்து கையொப்பத்தை பெற்று தருமாறு அதிபர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

அவர்கள் விரும்பினால் ஒரு நாள் சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, தாமும் கொவிட் – 19 தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும், இம் மாதத்தில் இருந்து தாம் பெற்றுக் கொண்ட கடன்களை வங்கிகள் மீண்டும் மீள அறவிடவுள்ளமையால் இவ்வாறு பணம் வழங்குவது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆசிரியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.