கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சடலம் மீட்பு!!

592


சடலம்..



கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – 07, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



இன்று காலை பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




உ யிரிழந்த நபர் 60 – 65 வயதுடையவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.