வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் ஆராய்வு!!

1384

வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில்..

வடமாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் இன்று (12.06.2020) இடம்பெற்றது.

அண்மையில் வெளியாகிய க.பொ.சாதரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா மாவட்டம் 21 ஆவது நிலையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்டம் கல்வி தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் கடந்த 5 வருட கல்விநிலை தொடர்பில் ஆராய்ந்து அடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இதன்போது ஆங்கில மொழி கல்வி மேம்படுத்தல் அங்குரார்ப்பண நிகழ்வும்இடம்பெற்றதுடன், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆளுனர் மற்றும் அரசாங்க அதிபரால் ஆங்கில கற்கைக்கான தரவு சேமிப்பு கருவியும் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுனர் திருமதி.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாண பணிப்பாளர் எஸ்.உதயகுமார், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன,

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா வடக்கு வலக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், கோட்டக்கல்வி அதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் வவுனியா தெற்கு மற்றும் வடக்கு வலயபாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.