வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவித்தல்!!

1824

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில் 80 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19.06.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இந்த வருடம் பொங்கல் விழாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி 80 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,

பொங்கல் விழாவிற்கு எந்த ஒரு பகுதியிலிருந்தும் மக்களை வருகை தர வேண்டாம் அதனை மீறி வருகை தரும் மக்களை திருப்பி அனுப்புவதற்குறிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம்.

நேர்த்திக்கடன்களை தங்களுடைய பகுதியில் உள்ள ஆலயத்தில் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்வதுடன் பொங்கல் விழாவினையடுத்து சுகாதார நடைமுறைகள், போக்குவரத்து வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றினை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி வருபவர்களை பொலிஸாரின் உதவியுடன் திருப்பி அனுப்பவதற்குறிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

இந்த வருடாந்த உற்சவம் முக்கியமான நிகழ்வுகளை மாத்திரம் உள்ளடக்கி மிகவும்எளிமையான முறையில் இடம்பெறவுள்ளது என தெரிவித்தார்.