வவுனியா பொலிசாரால் வேப்ப மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!!

1501

மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது..

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்ட வேப்ப மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வேலி ஓரமாக நின்ற வேப்ப மரமானது வெட்டப்பட்டு கப் ரக வாகனத்தில் ஏற்றப்படுவதாக 119 பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று 6 வேப்ப மரக்குற்றிகளுடன் கப்ரக வாகனத்தை கைப்பற்றியுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.