க தறிய காவலர் குடும்பம் : ஒரு நிமிஷம் அப்பா முகத்தை பார்ப்பதற்கு கெஞ்சிய பிள்ளைகள் : கண்கலங்க வைத்த காட்சி!!

2506

அப்பா முகத்தை பார்ப்பதற்கு..

தமிழகத்தில் கொரோனாவால் உ யிரிழந்த பொலிஸ் இன்ஸ்பெக்டரின் உடலை பார்க்க வேண்டும், தொட வேண்டும் என்று அவரது மகள் க தறி அ ழுத வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை க ண்கல ங்க வைக்கிறது.

சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி. 47 வயது பட்டதாரியான இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக தேர்வாகி தனது பணியை துவங்கினார்.

பாலமுரளிக்கு கவிதா என்ற மனைவியும், ஹர்ஷவர்தனி என்ற மகளும், நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரடங்கின் போது, பாலமுரளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

கடந்த 17-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பாலமுரளி உ யிரிழந்தார். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் பா துகாப்புடன் அருகில் இருக்கும் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிற்கு அமரர் ஊர்தியில் பாலமுரளி உடலை கொண்டு சென்றனர்.

அப்போது, மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்த, கவிதா, ஹர்ஷவர்தனி, நிஷாந்த் ஆகியோர் பாலமுரளியின் முகத்தை பார்க்க முயன்றனர்.

நோய் தொற்று ஏற்படும் என்பதால் அங்கு பா துகாப்பு பணியில் இருந்த பொலிச்சார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல் அருகே விடாமல் தடுத்தனர்.

இருப்பினும், அவரது மகள் ஹர்ஷவர்தனி, பா துகாப்புக்கு இருந்த அனைவரையும் மீறி தனது தந்தையை பார்க்க து டித்தார். அப்பாவை, ஒரு நிமிடமாவது பார்க்க வேண்டும். தொட வேண்டும் என்று க தறி அ ழுதார். சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று பரவும் என்பதால், பாலமுரளி உடலை தொடவிடாமல் அமரர் ஊர்தியில் ஏற்றி சென்றனர்.

அவரது மனைவி கவிதா அமரர் ஊர்தியை பிடித்தபடி சிறிது தூரம் ஓடினார். இதை பார்த்த மருத்துவமனையில் இருந்த சிலர் க ண்க லங்கினர். பாலமுரளியின் முகத்தை பார்க்க அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி க தறிய காட்சி, வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.