கனடாவில் காணாமற்போன இலங்கைத் தமிழர்!!

563

நடராஜா மகேந்திரராஜா..

கனடாவில் 52 வயதான இலங்கை தமிழர் கா ணாமல் போயுள்ளதாக பொலிசார் புகைப்படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் நடராஜா மகேந்திரராஜா என்ற 52 வயதானவர் கடந்த 21ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ஆம் திகதி காலை 10 மணிக்கு நடராஜா Islington Ave & Elmhurst Dr பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒல்லியான உருவம் கொண்டவர் ஆவார்.

காணாமல் போன அன்று நீல நிற காற்சட்டை மற்றும் நீண்ட ஸ்லீவ் டி-ஷர்ட் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜா குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.