கொரோனா வைரஸ் தொற்று : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு!!

1069

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் கூறுகையில்,

அடுத்த வாரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் எதிர்பார்க்கிறோம். தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் தொடர்கின்றன.

எனினும், நம்மிடம் இருக்கும் கருவிகளை கொண்டு தற்போதைக்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரமான பொறுப்பு நம்மிடம் உள்ளது என்ற நிதானமான நினைவூட்டலாக இது அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.