ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் : மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் குதித்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

4662

ஒரே பிரசவத்தில்..

மெக்சிகோ நாட்டை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது என்ற செய்தியைக் கேட்டதும் குழந்தையின் தந்தை மகிழ்ச்சியில் என்ன செய்வது எனத் தெரியாமல், மருத்துவமனையிலேயே உற்சாகமாக நடனமாடினார்.

ஆனால் அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. சிறிது நேரத்திலேயே 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த தந்தை அ திர்ச்சியில் க தறி அ ழுதுள்ளார். அவரை மருத்துவர்கள் தேற்றிய நிலையில், இது எப்படி சாத்தியம் என மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அ திர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

ஒருவேளை கொரோனா தொற்று உடையவர்கள் அந்த குழந்தையைப் பார்க்க வந்து, அதன் மூலம் பரவி இருக்குமோ என யோசித்தாலும் அதற்கும் வாய்ப்பு இல்லை.

இதனிடையே ஒரே பிரசவத்தில் பிறந்தது 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை ஆகும். ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உடல்நிலை சற்று தேறி வரும் நிலையில், மற்றொரு ஆண் குழந்தைக்குச் சுவாச பிரச்சினையால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த குழந்தைகள் தாயின் கருப்பையில் இருந்தபோது, கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா வைரஸ் பரவி இருக்க முடியுமா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அந்தக் குழந்தைகளுடைய தாய், தந்தைக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. ஒருவேளை அவர்கள் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்களா என்று கண்டறியப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.