சொந்த மகளுக்கு 26 ஆண்டுகளாக பூனைகளுக்கான உணவை வழங்கிய தாயார் : அதிர்ச்சி சம்பவம்!!

6459

சொந்த மகளுக்கு..

ரஷ்யாவில் தாயார் ஒருவர் தமது மகளை கடந்த 26 ஆண்டுகளாக பூனைகளுடன் கூண்டிலிட்டு கொ டுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த தாயார் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே இந்த கொ டூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நடேஷ்தா புஷுவேவா என்பவர் தமது 16-வது வயதில் இருந்தே சொந்த தாயாரால் குடியிருப்புக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வெளியுலகம் மிக மோசமானது என கூறியே, மகளை அவர் குடியிருப்பில் இருந்து வெளியேற அனுமதித்ததில்லை.

தற்போது 42 வயதாகும் நடேஷ்தா புஷுவேவா, தமது தாயாருக்கு முதுமையால் ஏற்பட்ட நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பிறகே குடியிருப்பில் இருந்து நீண்ட 26 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே வந்துள்ளார்.

தமது தாயாரின் கட்டளைகளை அனுசரித்ததாக கூறும் நடேஷ்தா புஷுவேவா, குடியிருப்பில் இருந்து வெளியேற ஒருபோதும் முயன்றதில்லை எனவும் கூறியுள்ளார்.

இவர்களது குடியிருப்பானது பூனைகள் மற்றும் எலியால் அலங்கோலமாக காணப்பட்டுள்ளது. தாயாரும் மகளும் இந்த 26 ஆண்டுகளாக ஒரே படுக்கையிலேயே படுத்து தூங்கியுள்ளனர். மேலும் பூனைகளுக்கான உணவையே இந்த 26 ஆண்டுகளும் நடேஷ்தா அருந்தி வந்துள்ளார்.

மட்டுமின்றி 2006-ல் இருந்து இதுவரை ஒருமுறை கூட நடேஷ்தா புஷுவேவா குளித்ததில்லை எனவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். எனது வாழ்க்கை பூனையின் வாழ்க்கையை விட மோசமானது. பூனைகளுக்கு அதிக உரிமைகள் உள்ளன. நான் இப்போது உ யிருடன் இருக்கிறேனா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நான் வெறும் நடைபிணம் என தமது ஆதங்கத்தை அவர் அதிகாரிகளிடம் கொட்டியுள்ளார். மேலும், தமக்கு கடவுச்சீட்டு ஒன்றும், வேலை வாய்ப்பும் தயார் செய்து தரும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.