வவுனியா செட்டிகுளத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!

1021


விபத்து..


வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.துடரிக்குளம் பகுதியில் புகையிரதக் கடவையினை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


58வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துளதாக தெரியவருகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.