கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் எச்சரிக்கை : அதிகபட்ச ஆதரவை கோருகிறது சுகாதாரத்துறை!!

559

கொரோனாவின் இரண்டாவது அலை..

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் தீவிரத்தன்மை தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சேனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகயை தடுக்க குறைந்தபட்சம் 68,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க சுகாதாரத்துறையினருக்கு ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் அதிகபட்ச ஆதரவை தர வேண்டும் என கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிக மோசமான நிலைமை இன்னும் வரவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

உலகின் பல நாடுகள் மீண்டும் அன்றாட சமூக செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி Tedroa Ghebreyesus தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-