முன்பின் தெரியாத பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்த கோடீஸ்வரர் : சில நாட்களில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

691


கோடீஸ்வரர்..



கேரளாவில் கோடீஸ்வர தொழிலதிபரை சில புகைப்படத்தை வைத்து மோ சடி செய்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிந்த பெண் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.



அடிமலி நகரை சேர்ந்தவர் விஜயன். இவர் தொழிலதிபர் ஆவார். கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி லதாதேவி என்ற பெண் விஜயன் வீட்டுக்கு வந்தார். விஜயனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத அவர், விஜயன் உறவினரின் 9.5 செண்ட் நிலம் வாங்குவது தொடர்பாக அவருடன் பேசினார்.




அப்போது விஜயன் அருகில் உட்கார்ந்து கொண்டு இருவரும் சேர்ந்திருப்பது போல லதாதேவி அவருக்கு தெரியாமல் தன் செல்போனில் புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.


இதன் பின்னர் பிப்ரவரி 4ஆம் திகதி விஜயனுக்கு ஷைஜன் என்பவர் போன் செய்து தான் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் விஜயனிடம், நீ லதாதேவியுடன் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் உன் மீது துஷ்பிரயோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வைப்பேன் என மி ரட்டினார். இதோடு சில புகைப்படங்களை பார்த்து பயந்து போன விஜயன் பணம் கொடுக்க ஒப்பு கொண்டார்.


இதை தொடர்ந்து பென்னி என்ற வழக்கறிஞர் மூலம் ரூ 70,000-ஐ விஜயன் கொடுத்தார். இதன் பின்னர் மீண்டும் இதை சொல்லியே மி ரட்டி ரூ 1.37 லட்சத்தை விஜயனிடம் இருந்து அந்த கும்பல் வாங்கியுள்ளது.

இதோடு சமீபத்தில் விஜயனை நேரில் சந்தித்து அவரிடம் மி ரட்டி ரூ 7 லட்சம் நிரப்பப்பட்ட காசோலையில் கையெழுத்து வாங்கினார்கள். இனியும் அவர்களின் மி ரட்டலை பொறுக்க முடியாத விஜயன் பொலிசில் புகார் கொடுத்தார். அதில், எந்த தவறும் செய்யாத தன்னை மிரட்டி ஒரு கும்பல் பணம் ப றிப்பதாக கூறினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்ட லதாதேவி, பென்னி, ஷைஜன் மற்றும் அவர்களுக்கு உதவிய ஷிமீர் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல லதாதேவியை அனுப்பி புகைப்படம் எடுக்க வைத்து பலரை மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் அந்த கும்பலிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.