மூன்று நாட்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பெற்றோர் நெகிழ்ச்சி தகவல்!!

1038

இளம்பெண்..

பிரித்தானியாவில் வெய்டன்ஸ்டோன் பகுதியில் மூன்று நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட இளம்பெண் பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் கோரிக்கையை ஏற்று மனமுவந்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவர் குடியிருப்புக்கு திரும்பினாரா? அல்லது அவர் இந்த மூன்று நாட்களும் எங்கே சென்றிருந்தார் உள்ளிட்ட தகவல்களை அவர்கள் வெளியிட மறுத்துள்ளனர்.

இருப்பினும் North East Command Unit பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பார்கள் என நம்பப்படுகிறது. புதனன்று பகல் சுமார் 10.30 மணியளவில் வழக்கமான நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார் 23 வயதான பர்தீப் கவுர் பிளாஹா என்வர்.

வெய்டன்ஸ்டோன், வால்தம் வனப்பகுதி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த இவர், பொதுவாக முக்கால் மணி நேரத்தில் நடைப்பயிற்சி முடித்து திரும்புவார் என கூறப்படுகிறது.

ஆனால் புதனன்று சென்றவர் மூன்று நாட்களாக குடியிருப்புக்கு திரும்பாத நிலையில் கவலையடைந்த பெற்றோரும் அவரது நண்பர்களும் பொதுமக்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நிலையிலேயே, பர்தீப் கவுர் பத்திரமாக உள்ளார் என்ற தகவலை அவரது பெற்றோரும் நண்பர்களும் சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.