அதிகாரிகளை கைக்குள் போட்டு 34 வயதில் பெண் செய்த பித்தாலாட்டம் : சிக்கியது எப்படி?

809

ஸ்வப்னா சுரேஷ்..

கேரளாவையே உலுக்கி வரும் தங்க க டத்தல் விவகாரத்தில், சிக்கியுள்ள ஸ்வப்னாவைப் பற்றி பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது.

மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோ தனையிடுவதில்லை. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் க டத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து , வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இது போன்ற பார்சல்களை சோ தனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றனர்.

அதன் படி, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலை சோ தனையிட்ட போது, 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அ திர்ச்சியடைந்தனர்.

அதன் பின் விசாரித்த போது, இந்த க டத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த க டத்தல் விவகாரம் கேரளவையே உ லுக்கியுள்ள நிலையில், ஸ்வப்னா தங்க க டத்தலை எப்படி நடத்தினார்? எப்படி இது எல்லாம் நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

34 வயதாகும் ஸ்வப்னா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்துள்ளார். அபுதாபி விமான நிலையத்தில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகியுள்ளது.

அதன் பின் 2014-ஆம் ஆண்டு திடீரென்று கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, கேரளாவிற்கு திரும்பிவிட்டார்.

பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்த போது, சக ஊழியர் மீது பொய்யான பு கார் கொடுத்ததால், அங்கே இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக வேலைக்கு சேர்ந்த போது தான், இவருக்கு தங்கம் க டத்தும் எண்ணம் தோன்றியுள்ளது.

அந்த நேரத்தில் தான் மீண்டும் ஒரு பி ரச்சனையில் சி க்கிய இவர், அந்த தூதரக பணியில் இருந்தும் வெளியேறினார்.

இதற்கு பிறகு கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் கான்ட்டிராக்ட் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னா, அந்த நேரத்தில், தன் மீதான வழக்குகளை மறைத்து வேலைக்கு சேர்ந்ததால் பொலிசில் சிக்கியுள்ளார்.

ஆனால், மேலிடத்தில் இருந்து அழுத்தம் வரவே, விசாரணையில் இருந்து பொலிசார் பின் வாங்கியுள்ளனர். கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்தால், ஏற்கனவே வேலை பார்த்த தூதரக அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பிலேயே ஸ்வப்னா இருந்து வந்துள்ளார்.

அப்போதுதான், போ லி ஆவணங்கள் தயாரித்து தூதரகத்தின் சிறப்பு அந்தஸ்தை த வறாக பயன்படுத்தி, தங்க க டத்தலையும் செய்ய ஆரம்பித்தார். வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோ தனை செய்ய முடியாது என்ற பொதுவான விதியை ஸ்வப்னா நன்கு அறிந்துள்ளார்.

அதை, ஸ்வப்னா சரியாக பயன்படுத்தி கொண்டு காய் நகர்த்தியுள்ளார். அப்படி ஒருமுறை தங்கம் க டத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம். இப்படி தான் ஸ்வப்னா அதிகாரிகளிடம் சி க்கியுள்ளார்.

தூதரக அதிகாரிகளை சரி கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஸ்வப்னா நிறைய பார்ட்டிகள் தந்திருக்கிறார்.

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள்கூட, ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, செல்வார்களாம்.. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, ஆட்டம் காட்டி உள்ளார் ஸ்வப்னா.

அத்துடன் தங்க வேட்டையையும் சேர்த்து நடத்தி உள்ளார். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு, நடிகை பூர்ணாவை மி ரட்டிய கும்பலுக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிசாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது.

பூர்ணாவை கடந்த சில நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பல் மி ரட்டியது. அவர்களை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த கும்பல் தங்க க டத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது.

ஆனால் இப்போதுதான், தங்கம் க டத்திய ஸ்வப்னாவுக்கும் இந்த கு ம்பலுக்கும் தொடர்பு உள்ளது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. தங்க க டத்தலுக்காக மொடல் அழகிகள் மற்றும் நடிகைகளை அவர்கள் பயன்படுத்தியதும் பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த க டத்தல் கும்பல் பற்றி பொலிசார் சுங்க துறைக்கு சொன்ன பின்பு தான், ஸ்வப்னாவுடன் தொடர்பு என்பதே அவர்களுக்கு தெரியவந்துள்ளது.