சகோதரர்களின் மொத்த வயது 855 :கின்னஸ் சாதனைக்குத் தகுதி!!

588

Kinnas

லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 சகோதரர்களின் வயதுக் கூட்டுத்தொகை 855 வருடங்கள். இந்த குடும்பம் உலகத்தின் மூத்த குடும்பம் என கின்னஸ் குழு அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பிரக் நகரில் வசித்து வரும் 68 முதல் 89 வயதுள்ள புருட்நெல் சகோதரர்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

ராபர்ட் (68), ஜான் (69), ஜீன் (71), மேரியன் (74), ஜேம்ஸ் (76), வின்சென்ட் (78), மே (79), மேரி (80), வின்பிரெட் (83), வில்லியம் (88) மற்றும் பெர்னாடெட்டி (89) ஆகிய இந்த சகோதர-சகோதரிகள் சிறு வயதில் இருந்ததைப் போலவே இப்போதும் இணைந்திருக்கிறார்கள்.

இதுபோன்று அதிக வயதுள்ள சகோதரர்கள் கொண்ட எந்த ஒரு குடும்பம் பற்றிய தகவலும் இதுவரை வரவில்லை என்று கின்னஸ் உலக சாதனைக் குழு கூறியுள்ளது.

இதற்கு முந்தைய சாதனையாக, 9 சகோதரர்களின் வயது கூட்டுத்தொகை 828 ஆண்டுகளாக இருந்தது. எனவே, இந்த சாதனையை முறியடிக்க தகுதி பெற்றுள்ள புருட்நெல் குடும்பம், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்கலாம் என்று கின்னஸ் குழு தெரிவித்துள்ளது.