வவுனியாவில் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் மும்முரம்!!

1188


தபால் மூல வாக்களிப்பு..



பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியாவிலுள்ள அரச திணைக்களங்களில் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.



முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் அவர்களது திணைக்களத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களித்து வருகின்றதுடன் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.




இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நாளையும் இடம்பெறவுள்ளதுடன் தேர்தல் காண்காணிப்பு பணியில் மாவட்ட செயலகத்தினரும் தேர்தல் திணைக்களத்தினரும் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.


ஆசிரியர்கள், அதிபர்கள் காலை வேலையிலேயே வரிசையில் காத்திருந்து வாக்களித்திருந்தனர். 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோருக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.