வவுனியாவில் இதுவரை 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு : அரச அதிபர்!!

892

தேர்தல் முறைப்பாடுகள்..

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை இருபது (20) முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் தொடர்பில் சிறியளவிலான முறைப்பாடுகளே இதுவரை பதிவாகியுள்ளது. அந்தவகையில் கடந்த மாதம் 9 ஆம் திகதியிலிருந்து இன்று(14.07.2020) மாலைவரை 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தபால் மூலமான வாக்களிப்பு தொடர்ந்து‌‌ வருகின்றது. நேற்றைய தினம் மதியம் 12 மணிவரை 50 வீதமான தபால்வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5132 தபால் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 4196, விண்ணப்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3381 விண்ணப்பங்களுமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 12709 தபால் மூலமான வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .