காதலித்து ஏமாற்றிய இளைஞன் : இறுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

829

இளம் பெண்..

இந்தியாவில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி ஆனையம்பட்டி வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அனிதா (வயது 25). இவருக்கு கடந்த 2016 ஆம் வருடத்தில் கூலமேடு பகுதியை சார்ந்தவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதன்பின்னர், கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் வி வாகரத்து பெற்றுள்ளார். இதன்பின்னர், தமிழக அரசு பணிகளுக்கு தயாராக முடிவு செய்து, கெங்கவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி தேர்வு மையத்திற்கு சென்று வந்துள்ளார்.

அப்போது விக்னேஷ் (வயது 25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்படவே, இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

மேலும், விக்னேஷ் பலமுறை திருமண ஆசைகாண்பித்து பெண்ணுடன் ஒன்றாக இருந்து வந்துள்ளான். இந்த விஷயம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவரவே, விக்னேஷின் இல்லத்தில் திருமணத்திற்கு க டுமையான எ திர்ப்பு கிளம்பியுள்ளது.

காதலர்கள் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், திருமணம் குறித்து பேசுகையில் விக்னேஷ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளான்.

இந்த விஷயம் தொடர்பாக அனிதா கடந்த 11 ஆம் தேதி கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இரண்டு பேரையும் விசரணைக்கு வரக்கூறி இருந்தனர்.

அனிதா நேற்று காலையிலேயே காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், விக்னேஷ் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனையடுத்து அனிதா காதலரின் வீட்டிற்கு முன்னதாக தர்ணா போ ராட்டம் செய்தார்.

தர்ணா போ ராட்டம் செய்தும் பலனில்லாததால் ம னவேதனையடைந்த அனிதா, அங்கிருந்த பூ ச்சிக்கொ ல்லி ம ருந்தை கு டித்து ம யங்கியுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கவே, செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காவல் நிலையத்திற்கும், விக்னேஷின் இல்லத்திற்கும் 200 மீ தொலைவே இருக்கும் நிலையில், பெண்மணியை நீண்ட நேரமாக காக்கவைத்து காவல் துறையினரும் அலட்சியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்மணி நியாயம் கேட்க விக்னேஷின் இல்லத்திற்கு சென்றும், அவருக்கு பாதுகாப்பு கருதி ஒரு காவல் அதிகாரி கூட வரவில்லை. பெண்ணின் இறப்பிற்கு காவல் துறையினரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.