கனகராயன்குளத்தில்..

வவுனியா, கனகராயன்குளம் வடக்கு பகுதியில் யானைகளின் அட்டகாசம் காரணமாக 20 இற்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (18.07) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனராயன்குளம் வடக்கு பகுதியில் ஆற்றங்கரையை அண்டியதாக உள்ள மேட்டுக் காணியில் காணப்படும் தென்னந்தோட்டத்திற்குள் இரவு வேளை புகுந்த யானைகள் அங்கு நின்ற பயன்தரு தென்னை மரங்களை முறித்து வீழ்த்தியுள்ளதுடன் அதனை சேதப்படுத்தியும் உள்ளன.

யானைகளின் அட்டகாசம் காரணமாக காய்த்துக் கொண்டிருந்த 20 வரையிலான தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதன் உரிமையாளர், தமது வருமானம் தரும் பயிர்களை யானைகளிடம் இருந்து காப்பாற்ற உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இப்பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.






