வவுனியா செட்டிக்குளத்தில் பலத்த காற்று : மரம் வீழ்ந்து மின்சார இணைப்பு துண்டிப்பு!!

777

வீரபுரம் பகுதியில்

செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் இன்று (20.07.2020) மாலை வீசிய பலத்த காற்றினால் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மின்சார இணைப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது.

செட்டிகுளம் – வீரபுரம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பிகள் இவ்வாறு பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த மின்சார இணைப்பு கம்பிகள் வீடுகளின் முன் விழுந்த நிலையில் காணப்படுகின்றது . அத்துடன் மின்சார இணைப்புக்கான கம்பிகளுக்கு மேல் மரம் விழுந்துள்ளமையினால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தால் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.