இளைஞர்கள் சவால்களை கையில் எடுக்கவேண்டும் : வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன்!!

530

vavu

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான புதிய நிர்வாகிகள் தெரிவில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இளைஞர்கள் வருங்காலத்தின் சிப்பிகள். இவாகளில் ஏராளமான நல்ல இளைஞர்கள் இருக்கின்றனா. எனினும் ஒரு சில தீய சிந்தனையுள்ள இளைஞர்களால் இளைஞர்கள் சகலருக்கும் நற்பெயர் குறைவதாக உள்ளது.

எனவே இளைஞர்களிடம் எதிர்காலத்தை எவ்வாறு கையில் எடுப்பது என்ற இலட்சிய நோக்கு இருத்தில் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே இளைஞர்கள் மேன்மையடைய வாய்பபுக்கள் ஏற்படும். ஆனால் வலிமை மிக்க இளைஞர்களின் கைகளில் வாள்கள் இருப்பது துர்ப்பாக்கியமானது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உட்பட வேறு குழுவொன்றும் இயங்கிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளம் வயதினர். ஆவா குழுவின் தலைவர் 21 வயதுடையவராக இருந்துள்ளார். இது இளைஞர் சமூகம் தவறாக செல்வதை எடுத்துக்காட்டியுள்ளது. இக் குழுக்கள் யாழ்ப்பாணத்த மக்களை நித்திரையின்றி செய்துள்ளனர்.

இளைஞர்கள் பெரியவர்களுக்கு மதிப்பளித்து வணங்க வேண்டியவர்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து சில தீய குழுககள் பெரியவர்கள் தம்மை வணங்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். இது வெட்கப்படவேண்டிய விடயம்.

இளைஞர்களாகிய நீங்கள் சவால்களை கையில் எடுக்க வேண்டும். இளைஞர் கழகத்தில் நான் இருந்தமையினாலேயே இன்று பிரதேச செயலாளராக இருக்கின்றேன். அதன் மூலம் பெறப்பட்ட தலைமைத்துவம் எனக்கு மிகவும் பயனாகவுள்ளது. எனவே இளைஞர்கள் இளைஞர்கழகங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் திட்டமிடலுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும் என்பதுடன் இலட்சிய நோக்கோடு செயற்படவும் வேண்டும். ஆனால் இன்று வீதிகளில் செல்லும் பல இளைஞாகள் எதுவித சிந்தனையும் இன்றி திரிகினறனர். இவர்களால் நாட்டிற்கு சுமையாகவே இருபபர்.

இளைஞர்களாகிய நீங்கள் சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அளவிற்கு சவால்களை எதிர்கொள்பவர்களாக வளரவேண்டும். முழுமையாக சமூக பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து விடமுடியாது. எனினும் சில பிரச்சனைகளை அடையாளம் கண்ட அதனை சீர்செய்ய முடியும். குறிப்பாக நீங்கள் வாழும் பிரதேசத்தை மது அற்ற பிரதேசமாக மாற்றுவதாக சத்தியம் செய்து கொள்ளுங்கள்.

இதன் மூலம் பிழையாக செல்லும் இளைஞர் சமூகத்திற்கு நீங்கள் முன்னுதாரணமாக வழிகாட்டியாக இருந்து பழையாக செல்பவர்களை உங்கள் பக்கம் வருவதற்கு வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்தார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்க உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான புதிய நிர்வாக தெரிவு இன்று (12.2) வவுனியா வடக்கு பிரதேச செலயகத்தில் இடம்பெற்றது.

இளைஞர் பாராளுமன்றத்தின் வவனியா மாவட்ட பிரதிநிதியும் பிரதி பிரதமருமான ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா வடக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இளைஞர் கழகங்களுக்கிடையிலான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இளைஞர் கழகங்களின் சேவை மற்றும் அதன் தாhப்பரியங்கள் தொடர்பில் கழகத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவனியா வடக்கு பிரதேசத்தின் இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக தெரிவும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தலைவராக ம. உதயகுமாரும் செயலாளராக சி.சதீஸ்குமாரும் பொருளாளராக ஆர்.ரதனும் உபதலைவராக ஆர்.அகல்யாவும் உப செயலாளராக இ.தர்சிகாவும் அமைப்பாளராக எஸ்.சஞ்சனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிகழ்வில் வவனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ். எம். எஸ்.செனவிரத்ன, மாவட்ட சம்மேளனத்தலைவர் ரி. அமுதராஜ், நிஸ்கோ மாவட்ட முகாமையாளர் ஜி. ஏ.சந்திரசேன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.