வவுனியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த மரக்காலை!!

856

மரக்காலை..

வவுனியா – பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இத் தீவிபத்து இன்றையதினம் அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை தீயணைப்பு வாகனத்தின் வேகமான செயற்பாட்டினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன் பாரிய சேதம் தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பெறுமதியான மரங்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இவ்விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.