வவுனியாவில் இரு கட்சியினருக்கிடையில் மோ தல் : நால்வர் வைத்தியசாலையில்!!

725

இரு கட்சியினருக்கிடையில்..

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் நேற்று (27.07.2020) இரவு றிசாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களிற்கிடையில் இ டம்பெற்ற மோ தலில் 4 பேர் காbயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மஸ்தானின் ஆதரவாளர்கள், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம்.

இதன்போது அங்குவந்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் த ம்மீது தா க் கு த ல் ந டாத்தினர். இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் கா யமடைந்துள்ளதுடன், த மது வா கனங்களின் க ண்ணாடிகளும் உ டைக்கப்பட்டதாக தெ ரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த றிசாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தமது கிராமத்தில் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு தாம் அனுமதிப்பதில்லை என்றும் இது கிராமத்தில் வசிக்கும் மக்களின் முடிவாக இருக்கும் நிலையில்,

மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்திற்குள் வருகைதந்து சுவரொட்டிகளை ஒட்டமுனைந்ததாகவும், அதனை தடுக்கமுற்பட்டபோது த ம்மீது தா க் கு த ல் மே ற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதேவேளை தமது கிராமத்தை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தா க் கு த லி ல் கா யமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த ச ம்பவத்தால் இரண்டு தரப்பின் ஆதரவாளர்களும் சாளம்பைக்குளம் பகுதியில் ஒன்றுகூடியிருந்தனர் இ தனால் ப தட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர்,

மற்றும் பூவரசங்குளம் பொலிசார், விசேட அ திரடிப் ப டையினரின் உதவியுடன் பா துகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் குழப்பநிலையை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இரவு 12 மணிக்கு பின்னர் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அ திரடிப டையினர் மற்றும் து ப்பாக்கி ஏந்திய பொலிசார் சாளம்பைக்குளம் பகுதியில் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சந்திக்கசென்றதாக தெரிவிக்கப்படுபவரின் குடும்பத்தினர் பா துகாப்பு கருதி பொலிசாரால் அழைத்துச்செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.