வவுனியா கனகராயன்குளம் பகுதியில் யானையுடன் மோதிய புகையிரதம்!!

779

கனகராயன்குளம் பகுதியில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது. காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீ தேவி அதிவேக புகையிரதம் மாங்குளத்திற்கும் புளியங்குளத்திற்கும் இடையே பயணித்த போது புகையிரத தண்டவாளத்தை ஊடறுத்துச் சென்ற காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளதுடன், புகையிரதம் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டது. எனினும் அதிஸ்டவசமாக பயணிகளிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் மற்றும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து காரணமாக பலமணி நேர தாமதத்திற்கு பின்னரே புகையிரதம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.