வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்!!

35


வாகன விபத்தில்..


வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில், இன்று(13.08.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த முச்சக்கரவண்டி ஈரப்பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.


விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.