கனடாவில் கா ணாமல்போன திவாகர் ரஜீவ்!!

691

திவாகர் ரஜீவ்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 16ம் திகதி முதல் 26 வயதான திவாகர் ரஜீவ் என்பவரை கா ணவில்லை என கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவாகர் ராஜ் என்பவர் 16ம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் Ellesmere Road and Mornelle Court பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார்.

இவர் 5அடி 9 அங்குலம் உயரமுடையவர் என்றும் 81 கிலோகிராம் எடையுடையவர் என்றும் கறுத்த தலைமுடியைக்கொண்ட இவர் கொண்டை வைத்துள்ளார் எனவும் பிரவுன் கண்களைக் கொண்டவர் எனவும் காணாமல் போன அன்றைய தினம் கறுப்பு நிற பாண்ட்ஸ் அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 416-808-4300 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாக தம்மைத் தொடர்புகொண்டு தெரிவிக்கும்படியும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.