கன்னியமர்விற்கு வந்து வரலாற்றில் இடம்பிடித்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்!!

653

மதுர விதானகே..

வரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே இவ்வாறு படகில் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பில் கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே கூறுகையில்,

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்தது.

அத்துடன் கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.