சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான முக்கிய அறிவிப்பு!!

596

சாதாரண தரப் பரீட்சை..

சாதாரண தரப் பரீ்ட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தை நீடித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் விண்ணப்பங்களை கையளிக்கும் திகதி ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 21 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை கையளிக்கும் திகதி முடிவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பாடசாலைகள் ஊடாக விண்ணப்பிக்கும் பரீட்சாத்திகள் அவர்களின் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தனிப்பட்ட பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.